வடசிற்றம்பலம் முருகர்கோவில் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
வடசிற்றம்பலம் முருகர்கோவில் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.;
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகராட்சி, 2-வது வார்டுக்குட்பட்ட வடசிற்றம்பலம் முருகன் கோவில் பகுதியில், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இரண்டாவது வார்டுக்குட்பட்ட வடசிற்றம்பலம் முருகன் கோவில் பகுதியில் கால்வாய் வசதியின்றி, திறந்தவெளியில் கழிவுநீர் சென்றதால்,
அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் அமைத்து தர, அப்பகுதி வாசிகள் நகராட்சி ஆணையரிடம் பலமுறை மனு அளித்து வந்தனர்.
இதையடுத்து, நகராட்சி நிதியின் கீழ், 2024 -- 25ம் நிதியாண்டில், 7.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 100 மீட்டர் நீளத்திற்கு, திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் மற்றும் இரண்டு சிறிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.