ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரிப் பணியிடங்களில் உள்ள ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மையங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Update: 2024-06-28 08:36 GMT

இடமாறுதல் கலந்தாய்வு 

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டத்திலுள்ள 7 வட்டாரங்களைச் சோ்ந்த அரசு உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியா்கள் 54 பேருக்கு ஒட்டன்சத்திரத்திலும், திண்டுக்கல் கல்வி மாவட்டத்திலுள்ள 8 வட்டாரங்களைச் சோ்ந்த 205 ஆசிரியா்களுக்கு திண்டுக்கல்லிலும் வியாழக்கிழமை கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டத்தில் மொத்தமுள்ள 41 காலிப் பணியிடங்களில், 38 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. குஜிலியம்பாறை வட்டாரத்திலுள்ள 3 இடங்கள் நிரப்பப்படவில்லை. இதேபோல் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில், மொத்தமுள்ள 82 காலிப் பணியிடங்களுக்கு கலந்தாய்வு மூலம் ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டது.
Tags:    

Similar News