நீலகிரியில் தொடர் மழை: வீடு தடுப்புச் சுவர் இடிந்து சேதம்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக ஊட்டி படகு இல்லம் செல்லும் ரயில்வே தரைப்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கிய மழை நீரில் சிக்கிய வாகனத்தையும் சுற்றுலாப் பயணிகளையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். தொடர் மழையால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது.
விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்தால் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். இன்றும் ஊட்டியில் மழை தொடர்ந்த நிலையில் தொடர்மழை காரணமாக ஊட்டி காந்தல் ஸ்லாட்டர் ஹவுஸ் லைன் பகுதியில் உள்ள லூர்து மேரி என்பவரின் வீடு இடிந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து ஊட்டி தாசில்தார் சரவணகுமார் குமார் தலைமையிலான வருவாய்த்துறைனர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து ரூ.8000 நிவாரணம் வழங்கினர்.
ஊட்டி எட்டின்ஸ் சாலையில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன அந்தந்த இடங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.