அனல்மின் நிலையத்தில் காப்பர் வயர் திருட்டு - போலீஸ் விசாரணை!
தூத்துக்குடி என்.டி.பி.எல்., அனல்மின் நிலையத்தில் ரூ.9.34 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ;
Update: 2024-05-19 02:00 GMT
என்.டி.பி.எல்., அனல் மின்நிலையம்
தூத்துக்குடி என்.டி.பி.எல்., அனல் மின்நிலையத்தில் திறந்தவெளி குடோனில் இருந்த 3,887 மீட்டர் காப்பர் வயர்கள் கடந்த 17ம் தேதி திருடு போய்விட்டது. இதன் மதிப்பு ரூ.9லட்சத்து 34ஆயிரத்து 700 ஆகும். இதுகுறித்து அனல்மின் நிலைய செயற்பொறியாளர் ரமேஷ் (57) தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) செந்தில் வேல்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் காப்பர் வயர்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.