நீலகிரி - கேரளா எல்லை 5 சோதனை சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

நீலகிரி - கேரளா எல்லைப் பகுதிகளில் உள்ள 5 சோதனை சாவடிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்.

Update: 2024-01-02 17:45 GMT

நீலகிரி - கேரளா எல்லைப் பகுதிகளில் உள்ள 5 சோதனை சாவடிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்.

கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி - கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள நாடு காணி, பாட்ட வயல், நம்பியார் குண்ணு, சோலாடி, தாளூர் என கேரளா எல்லையை ஒட்டியுள்ள 5 சோதனை சாவடிகளில் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாகவும், நாள்தோறும் நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பேருந்தில் பயணித்து வரும் பொது மக்களுக்கும் வெப்பநிலைமானி கொண்டு உடல் வெப்பம், காய்ச்சல் இருமல் மற்றும் சளி உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 5 பேருக்கு கொரோனோ தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் அவர்கள் வீட்டு கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News