அவிநாசி ஏல மையத்தில் பருத்தி ஏலம்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஏல மையத்தில் ரூ. 2 3/4 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.;
Update: 2024-06-14 02:52 GMT
பருத்தி ஏலம்
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதி வாரம் புதன் கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 126 மூட்டை பருத்தி கொண்டு வரப்பட்டது. இதில் ஆர். சி. எச். ரகப்பருத்தி குவிண்டால் ரூ. 7,000 முதல் ரூ. 8,036 வரையிலும், மட்டரகபருத்தி குவிண்டால் ரூ. 2,500 முதல் ரூ. 3,500 வரையிலும் வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 72 ஆயிரம் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்...