தானப் பத்திரத்தை ரத்து செய்யக்கோரி தம்பதியர் தர்ணா போராட்டம்

சொத்துக்களை தானமாகப் பெற்றுக் கொண்டு, பராமரிக்க மறுக்கும் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தானப் பத்திரத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தம்பதி தா்னாவில் ஈடுபட்டனா்.

Update: 2024-06-25 12:45 GMT

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டை அடுத்த குல்லலக்குண்டைச் சோ்ந்தவா் மகாமுனி (77), இவரது மனைவி சிட்டுவள்ளி (65). இவா்கள் இருவரும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

அப்போது மனுக்கள் பதிவு செய்யும் இடத்துக்குச் செல்லும் வழியில் தரையில் அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது மகாமுனி கூறியதாவது: எங்களது சொத்தை, எனது மகன் துரைசாமிக்கு தானமாக வழங்கினேன்.

சொத்தை தானம் பெறும்போது, என்னையும், எனது மனைவியையும் பாதுகாப்பதாகவும், மாதந்தோறும் செலவுக்கு பணம் தருவதாகவும் உறுதி அளித்தாா்.

ஆனால், பராமரிக்கவும் இல்லை, செலவுக்கு பணமும் தரவில்லை. இந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தாா்.

Tags:    

Similar News