உடல் உறுப்புகள் தானம் செய்த சி.ராஜ்குமார் - ஆட்சியர் ச.உமா மரியாதை

உடல் உறுப்புகள் தானம் செய்த சி.ராஜ்குமார் உடலுக்கு ஆட்சியர் ச.உமா, மதுரா செந்தில் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Update: 2023-11-29 18:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, நாமக்கல் மாவட்டம், சிங்கிலிப்பட்டி கிராமம், பொய்யேரியை சேர்ந்த சி.ராஜ்குமார் (வயது 41) சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், நாமக்கல் வட்டாட்சியர் சக்திவேல், எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.



Tags:    

Similar News