சி.பி.எம்.முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி நூற்றாண்டு விழா

குமாரபாளையத்தில் சி.பி.எம். சார்பில் நடந்த  முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியின் நூற்றாண்டு விழாவில் அவரது மக்கள் பணிகள் குறித்து நினைவு கூறப்பட்டது.

Update: 2024-02-19 04:39 GMT

நூற்றாண்டு விழா 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சி.பி.எம். சார்பில்  முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியின்  நூற்றாண்டு விழா நகர குழு செயலர் சக்திவேல் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட குழு செயலர் கந்தசாமி பேசியதாவது: முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த போது தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். அரசு பள்ளிகளுக்கு எண்ணற்ற பணிகளை செய்து கொடுத்துள்ளார். வீடு இல்லாத ஏழை, எளியவர்களுக்கு வீடுகள் கிடைக்க உதவி செய்தார். தொழிலாளர் பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்து வைத்து, தொழிலாளிகளுக்கும், முதலாளிகளுக்கும் சுமுக உறவை ஏற்படுத்தினார். இவ்வாறு அவர் பேசினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், நகர குழு உறுப்பினர்கள் சண்முகம், கந்தசாமி, காளியப்பன், மாதேஸ், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News