நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

Update: 2023-12-13 04:22 GMT


ஆர்ப்பாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு 24வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில், தொடர் மழையால் சேதமடைந்துள்ள இரயில்வே பீடர் சாலை, புளுகணூரணி சாலை, புல்லலக்கோட்டை சாலை, பாத்திமா நகர் சாலைகளை உடனடியாக புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும்,நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரமான குடிநீரை வழங்கிட வேண்டும், நகராட்சி நிர்வாகம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு பல வருடங்களாகிய புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement

பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் உந்து நிலையங்களில் உள்ளமின் மோட்டார்களை முறையாக இயக்கிட வேண்டும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறிய கடைகள் நடத்த உரிமம் பெற்றவர்களிடம் தொழில் வழி செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் கட்டாயப்படுத்தகூடாது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் நகராட்சி ஆணையாளர் லீனா சைமனை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். மேலும் இந்த ஆர்பாட்ட நிகழ்வின்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி, முத்துக்குமார், நகர செயலாளர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News