நகர திமுக நிர்வாகி உயிரிழப்பு-மாநில நிர்வாகி‌ இரங்கல்

நகர திமுக நிர்வாகி விபத்தில் உயிரிழந்த நிலையில் மாநில நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-02-14 09:02 GMT
நகர திமுக நிர்வாகி உயிரிழப்பு-மாநில நிர்வாகி‌ இரங்கல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை தெருவை சேர்ந்த பில்லா என்ற ராம் கணேஷ் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சங்கரன்கோவில் நகர கப்பல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக அரசியல் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாகன விபத்து ஏற்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் சங்கரன்கோவில் பகுதியில் இறுதி சடங்கு நடைபெற்ற நிலையில் அவருக்கு திராவிட முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் டி‌. ஆர். பி. ராஜா மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.
Tags:    

Similar News