சிவன்மலையில் அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இனம் நிலங்களை கடந்த மூன்று தலைமுறைகளாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான நிலத்தை நேற்று முன்தினம் ஏலம் விடப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலகத்தில் அறிவிப்பை ஒட்டிவைத்தனர் . அதைத் தொடர்ந்து ஏலம் துவங்கும் முன்பே தமிழக விவசாய சங்க ஆத விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையிட்டனர்.
ஆனால் விவசாயிகளை காவல்துறையினரை வைத்து தடுத்து கோவில் மேல் மண்டபத்தில் தனிநபர்கள் 15 பேர் மட்டுமே அனுமதித்து ஏலம் விடாமுயற்சி செய்தனர் அனால் தடைகளையும் மீறி காவல்துறையினருடன் பெண் மற்றும் ஆண் விவசாயிகள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஏலம் நடைபெறும் இடத்திற்கு வந்து கோஷமிட்டனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் எம்பி கனிமொழி அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,சாமிநாதன்,சேகர்பாபு,கயல்விழி செல்வராஜ், ஆகியோர் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு என்றும் பெண் விவசாயிகள் ஆவேசமடைந்த பேசினார் .
இதனால் ஏலம் நடத்தமுடியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். அறநிலையத்துறை அலுவலகத்திற்குள்ளும் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் சிவன்மலை பகுதியில் பரபரப்பு நீடித்துவருகின்றது.