நாகர்கூடல் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
நாகர்கூடல் பஞ்சாயத்து அலுவலகத்தை டேங்க் ஆபரேட்டர் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில், முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-06-01 07:03 GMT
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், நாகர்கூடல் பஞ்சாயத்திற்கு உட்பட்டது கூலிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன், மாற்றுத்திறனாளியான இவர் அதே பகுதியில் கடந்த, 30 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தக்க தொட்டி ஆப்பரேட்டராக பணி செய்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி கோவிந்தன், உடல் நலக்குறைவால் இறந்து போனார். அதனால் அவரது பணியை பஞ்சாயத்து நிர்வாகத்தின் அனுமதியுடன் அவரது மனைவி வேங்கம்மாளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. சில நாட்கள் வேங்கம்மாள் தண்ணீர் திறந்து விடும் பணி செய்து கொண்டிருந்தபோது திடீரென பஞ்சாயத்து நிர்வாகம் வேங்கம்மாளுக்கு பதிலாக வேறு ஒரு நபருக்கு பணி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கோவிந்தன் இறந்தபின் அவருடைய சம்பள நிலுவைத் தொகை மற்றும் ஈமச்சடங்கு செலவு இன்சுரன்ஸ் உள்ளிட்டவற்றை வழங்காமலும் தன் கணவரின் பணியையும் செய்யவிடாமல் இழுத்தடித்துள்ளனர். இதனை கண்டித்து தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக்க தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கிருஷ்ணன் தன்மையில் நாகர்கூடல் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு வேங்க அம்மாளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பேங்க் ஆப்ரேட்டர் கோவிந்தனின் மனைவி வேங்கை அம்மாள் கணவர் இன்றி தவித்து வரும் அவருக்கு அவருடைய பணியை வழங்க வேண்டும் என பஞ்சாயத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.