ஊத்தங்கரை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் தேவாதி அம்மன் திருவிழா

ஊத்தங்கரை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் தேவாதி அம்மன் திருவிழா நடைபெற்றது.

Update: 2024-02-04 16:36 GMT

திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளியில் ஸ்ரீ தேவாதி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தை மாதத்தில் ஆடுகளைப் பலியிட்டு அம்மனை வழிபடுவது வழக்கம். 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்பர்.

இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஜவுளித் தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ளனர். தொழில் சிறக்க ஆண்டுதோறும் ஆடுகளைப் பலியிட்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீ தேவாதி அம்மனை கரகத்துடன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, கோயில் வளாகத்தில் 10 ஆடுகள் பலியிடப்பட்டன. தொடர்ந்து, நடைபெற்ற விழாவில் 10-க்கும் அதிகமான ஆடுகள் பலியிடப்பட்டன. இந்த ஆடுகளை சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர்.

ஊர் செட்டியார் குப்புசாமி சங்கோதி செட்டி ராஜரத்தினம் ஆகியோர் தலைமையில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News