மாற்றுத்திறனாளி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கூட்டமைப்பு மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்.

Update: 2024-03-10 12:54 GMT

தர்மபுரி தமிழ்நாடு மாற்று திறனுடையோர் சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா தர்மபுரி பேருந்து நிலையம் அருகே  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் சங்க கெளரவ தலைவர் மைதிலி வரவேற்றார். நிகழ்ச்சியில் தர்மபுரி நகர் மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது கலந்து கொண்டு ரூ.1லட்சம் மாற்றுதிறனாளிகளுக்கு 7 பெண்களுக்கு இலவச வில் சேர், அரிசி,பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் நாட்டாண் மாது, மாற்றுதிறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப் பின் மாநில துணை தலைவர் துரைராஜ், தர்மபுரி மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு சங்க தலைவா வெங்கடேசன், கோவிந்த ராஜ், ஜெயராஜ், இந்திரா பாலசுப்ரமணியன், தர்மலிங் கம், வினோத்கும், தமிழ் செல்வி, ராஜேஸ்வரி, எல்ஐசி செந்தில், ராம். கிருஷ்ணமூர்த்தி, சீதா லெட்சுமி. செயலாளர் சுதா தர்மபுரி உணவு வங்கி ஒருங்கிணைப்பாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News