தேசிய சிலம்ப போட்டியில் மாணவர்கள் சாதனை - எஸ்.பி பாராட்டு
தேசிய சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுதாஸ் அவர்கள் பாரட்டுகளை தெரிவித்தார்;
Update: 2024-02-28 02:35 GMT
எஸ்.பி பாராட்டு
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி ஸ்டீபன் ஜூஸ் பாதம் அவர்கள் தலைமையில் இன்று உலக சிலம்பம் சம்மேளனம் நிறுவனர் பேராசான் செல்வராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படி அகில இந்திய சிலம்பம் சம்மேளம் பொதுச் செயலாளர் ஐரின் செல்வராஜ் அவர்கள் தலைமையில் 05.10.2023 முதல் 08.10.2023 வரை கடலூரில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக அணி சார்பாக தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 21 மாணவ மாணவிகள் மாஸ்டர் சுரேஷ்குமார் தலைமையில் பங்கேற்றனர். இப்போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் முதலிடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். இதில் 3 தங்கம் 1 வெள்ளி 8 வெங்கலம் என மொத்தமாக 12 பதக்கங்கள் பெற்றதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தனர். இதன் தொடர்ச்சியாக ஆசிய அளவில் ஆசியன் சிலம்பம் சம்மேனம் சாம்பியன்ஷிப் சிலம்பு போட்டி 26.12.2023 முதல் 29.12.2023 வரை நாகர்கோயிலில் நடைபெற்றது. இப்போட்டியில் மாணவ மாணவிகள் இந்திய அணி சார்பாக தருமபுரி மாவட்டம் அரூரைச் சார்ந்த மூன்று மாணவிகள் 9 மாணவர்கள் மாஸ்டர் சுரேஷ்குமார் தலைமையில் இந்திய அணி சார்பாக பங்கேற்றனர். இதன் மூலமாக 3 தங்கம் 7 வெள்ளி 13 வெண்கலம் மொத்தமாக 23 பதக்கங்கள் பெற்று இந்தியா அணி சாம்பியன் சிப் கோப்பை வெல்வதற்கு உறுதுணையாக இருந்த தருமபுரி மாவட்ட அரூர் பகுதியை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.