தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயல் வீரர் கூட்டம்

தருமபுரி கிழக்கு மாவட்டசெயல்வீரர் கூட்டம் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு அணியினரும் தனித்தனியாக ஏறாளமான நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று தீர்மானம்.;

Update: 2024-02-25 10:10 GMT
தருமபுரி கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் மருத்துவர் தருண், கே.வி.குப்பம் கோபி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பிரதமரை உருவாக்கும் இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அவரது கரத்தை வலுப்படுத்தும் விதமாக கடந்த தேர்தலை காட்டிலும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தருமபுரி நாடளுமன்ற வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் வகையில் கிழக்கு மாவட்டம் முழுவதும் வீடுவீடாக சென்று திமுக அரசின் சாதனைகளையும்,மோடி அரசின் 10 ஆண்டுகால வேதனைகளையும் பொது மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும் எனவும், முதலமைச்சர் அறிவித்தது போல் அனைத்து நகர, கிராமங்களிலும் தெரு முனைக் கூட்டங்களும்,திண்ணை பிரச்சாரங்களையும் மேற்கொண்டு முதல்வர் யாரை கை காட்டுகிறாரோ அந்த வேட்பாளரை நாம் வெற்றி பெறச் செய்ய அயராது பாடுபட வேண்டும் என்றும்‌ வருகிற மார்ச் 1ம்தேதி‌ திமுக தலைவர் தளபதி அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்டம் முழுவதும் ஒரு மாதம் ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலதிட்டங்களை அனைத்து அணியினரும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றபட்டது. இந்த கூட்டத்தில் நகர செயலாளர் நாட்டான் மாது அவைத்தலைவர் செல்வராஜ் மாநில வர்த்தகர்அணி துணை செயலாளர் தர்ம செல்வன் மாநில சட்டத்துறை இணை செயலாளர் ‌தாமரை செல்வன்,மாநில சுற்று சூழல் அணி துணை செயலாளர் செந்தில் குமார் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஜி.சேகர் மற்றும் ஒன்றிய,நகர,பேரூர் செயலாளர்களும் ஏறாளமன திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News