கண்மாயில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் சீமை கருவேலமரங்கள் சூழ்ந்துள்ளது. ஆண்டுக்கணக்கில் படர்ந்துள்ளதால் நீராதாரம் பாதிக்கப்படுவதுடன் விஷ பூச்சிகளின் புகழிடமாகவும் மாறி உள்ளது.மழையில் தேங்கும் நீரும் குறிப்பிட்ட காலங்களில் உறிஞ்சப்படுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் இந்நிலை நீடிக்கிறது .இதனை பராமரிக்கும் உள்ளாட்சி, பொதுப்பணித்துறையினர் எதையும் கண்டுகொள்ளாது அலட்சிய போக்கில் உள்ளனர். இனியாவது இதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.