மழைக்கால பேரிடர்கால மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
346 நிவாரண முகாம்கள், 4519 முதல்நிலை பொறுப்பாளர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட தயார்நிலை
சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமையில் மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி கலந்துகொண்டார். மயிலாடுதுறை மாவட்டத்தில், இரண்டு நாளில் 10 செ.மீ அளவிற்கு, மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. . மயிலாடுதுறை மாவட்டத்தில், 11 புயல் பாதுகாப்பு மையங்கள், 4 பல்நோக்கு பாதுகாப்பு நிவாரண முகாம்கள், 26 முன்னெச்சரிக்கை கருவிகள், 346 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் மிகவும், தாழ்வான பகுதிகளில் 12 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
4519, முதல்நிலை பொறுப்பாளர்கள், தயார் நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடர்பான, புகார் தெரிவிக்க 04364 222588, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களும், 7092255255 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், தொடர்புகொள்ளலாம். வடகிழக்கு பருவமழை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 65 நபர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தெரிவித்தார்.