அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. ;

Update: 2024-01-25 08:40 GMT

நோட்டு புத்தகங்கள் வழங்கல்

கடந்த டிசம்பர் 18, 19 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையில் கடும் பாதிப்புக்குள்ளான பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் உணவுப் பொருள்கள் தண்ணீர் வழங்க்கியதோடு, குடியிருப்பு பகுதியில் இருந்து மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டது.

அதன் பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆத்தூர் மற்றும் ஏரல் பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்தும் பணியை வாலிபர் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.  மேலும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகம் வழங்க வேண்டும் என முடிவெடுத்திருந்தது.

அதன் அடிப்படையில் மாநில குழு வழங்கிய ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள நோட்டு புத்தகங்கள் புல்லாவழி அரசு நடுநிலைப்பள்ளி, ஏரல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என 700 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் வாலிபர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் தோழர்கள் ஜான்சன், நேசமணி மற்றும் ராஜீவ் நகர் கிளை தோழர்கள் கருப்பசாமி, முனிஷ், தங்கராஜ், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News