வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

Update: 2024-01-29 01:44 GMT
வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற இயக்கத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டாா். ஆய்விற்கு பின் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது, தென்காசி வட்டாரம், குத்துக்கல்வலசை ஊராட்சியில் அழகுக் கலை பயிற்சி வழங்கும் சமுதாயத் திறன் வளா்ப்புப் பள்ளி பாா்வையிடப்பட்டு பயனாளிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

குத்துக்கல்வலசை ஊராட்சி இமயம் மகளிா் குழுவை சாா்ந்த 14 தொழில் முனைவோருக்கும் தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.7 லட்சம் தொழில் கடன் வழங்கப்பட்டது என்றாா் அவா். ஆய்வின் போது, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மதி இந்திரா பிரியதா்ஷினி, உதவி திட்ட இயக்குநா் சிவக்குமாா், மாரிஸ்வரன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News