12 இடங்களில் அதிரடி காட்டிய மாவட்ட காவல்துறை

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சார்பில் சாதிய அடையாளங்கள் மீது வண்ணம் பூசி அழித்தனர்.;

Update: 2024-02-16 02:08 GMT

சாதிய அடையாளங்கள் அழிப்பு

நெல்லை மாவட்ட காவல்துறையினர் சாதி அடையாளங்களை அழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று நாங்குநேரி நம்பிநகர், பெரும்பத்து, பட்டர்புரம் ஆகிய பகுதிகளில் 6 மின்கம்பங்கள், 5 சுவர்கள், 1 பாலம் என மொத்தம் 12 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து சாதிய அடையாளங்களை வண்ணம் பூசி அழித்தனர்.
Tags:    

Similar News