ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சிக்கு திமுகவும், ஸ்டாலினும் தான் காரணம்: அண்ணாமலை

Update: 2023-10-25 11:17 GMT

அண்ணாமலை


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், டி.ஆர். பாலு ஆளுநரை ஏக வசனத்தில் ஒருமையில் பேசியுள்ளார் எனவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கிய தலைவர்கள் குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விட்டனர் என்றவர், தென் தமிழகத்தில் குருபூஜைகளுக்கு செல்வது வார் ஜோனுக்குள் செல்வது போல இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வது போல உள்ளது என்றார்.

ஆளுநரின் கருத்து எந்த வகையிலும் தவறு கிடையாது எனவும், திமுக சுதந்திர போராட்ட வீரர்கள் எத்தனை பேரின் பெயர்களை பாடப்புத்தகங்களில் சேர்த்தது என வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்றார். சுதந்திர போராட்ட வீரர்களை இருட்டடிப்புச் செய்து விட்டு திராவிட தலைவர்களின் பெயர்களை வைப்பதாகவும் எந்த ஊரில் பேருந்து நிலையம் திறந்தாலும், கலைஞரின் பெயரை வைப்பதாக குற்றம் சாட்டினார்.

மக்கள் வரிப்பணத்தில் நினைவு மண்டபங்கள் கட்டுவது பெரிய விஷயம் இல்லை எனவும் இது சாதனை அல்ல என்றார். ஆளுநரை டி.ஆர். பாலு ஒருமையில் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றவர் டி.ஆர். பாலுவிற்கு திட்டுவது மட்டுமே முழு நேர வேலை ஆகிவிட்டதாக தெரிவித்தவர் ஆளுநரை வம்பிற்கு இழுக்கும் போக்கை திமுகவினர் விட்டு விட வேண்டும் என்றார்.

ஆளுநர் தனது வேலையை செய்கிறார் அவரை ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி என டி.ஆர்.பாலு கொச்சைபடுத்துவதாகவும் டி.ஆர். பாலு எம்.பி. சீட் கிடைக்க வேண்டும் என்ற நட்பாசையில் இவ்வாறு பேசுகிறார் என்றவர் பாரதியார் பற்றி பேச திமுக தலைவர்களுக்கு அருகதை இல்லை எனவும் பாரதியாரை திமுகவினர் பலகாலம் ஏற்று கொள்ளாமல் பாரதியாரை சாதி வட்டத்திற்குள் அடைக்க முயற்சி செய்தவர்கள் பாரதியாரை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியவில்லை என்பதால்,  அவரது வீட்டை அரசுடமை ஆக்கினார்கள் என்றவர் வாரணாசியில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீடு பெட்டி கடை மாதிரி இருப்பதாகவும் முதலமைச்சர் பாரதியார் பற்றி டிராமா போடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

Similar News