தி.மு.க., வேட்பாளர் மலையரசன் ஓட்டு சேகரிப்பு
கச்சிராயபாளையம் பகுதியில் தி.மு.க., வேட்பாளர் மலையரசன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
Update: 2024-04-09 04:52 GMT
வாக்கு சேகரிப்பு
கச்சிராயபாளையம் பகுதியில் தி.மு.க., வேட்பாளர் மலையரசன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட க.அலம்பலம், பொன்பரப்பட்டு, அம்மம்பாளையம், செம்படாகுறிச்சி மாதவச்சேரி, தாவடிப்பட்டு, கரடிசித்துார், பால்ராம்பட்டு, மாத்துார், மண்மலை, எடுத்தவாய்நத்தம், பரிகம், கச்சிராயபாளையம் உட்பட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க., வேட்பாளர் மலையரசன் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்வேறு இடங்களில் வேட்பாளருக்கு பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.