ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இன்வெர்டர் வழங்கிய திமுகவினர்
Update: 2023-11-01 06:08 GMT
கீழ்குளம் பேரூராட்சி, செந்தறை பகுதியில் கீழ்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினசரி சுமார் 100 புறநோயாளிகள், உள்நோயாளிகளாக மாதம் 50 பேரும், பிரசவத்திற்கும் இந்த மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் மின்தடை நேரங்களில் பயன்படுத்தப்படும் இன்வெர்ட்டர் பழுதடைந்து காணப்பட்டது. இதை அடுத்து அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் கீழ் குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபாலிடம் மருத்துவமனைக்கு இன்வெர்ட்டர் வாங்கி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் தன்னார்வலர்கள் உதவியுடன் மருத்துமனைக்கு இன்வெர்ட்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் கோபால், பேரூர் செயலாளர் கான், கவுன்சிலர் கிருஷ்ணன், அல்போன்சாள், மருத்துவர் ஆனி ஜனட் மேரி, சுகாதார ஆய்வாளர் ஜோஸ், செல்வராஜ், சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.