அமைச்சர் தலைமையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம்
ஒருங்கிணைந்த திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது
தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கௌதம், தமிழழகன் ஆகியோரின் ஏற்பாட்டில் நேற்று இரவு தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி Ex MLA.,மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி பழனியப்பன் ஆகியோர் தலைமையிலும்,தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் தர்மபுரி தொகுதி பொறுப்பாளருமான Dr AK தருண் அவர்கள் முன்னிலையிலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம்,தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி அறிமுகம் செய்து வைத்து தேர்தல் பணிகள் குறித்து கருத்துக்களையும் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை அமைப்பாளர்கள், மாவட்ட சமூக வலைதள பொறுப்பாளர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர்கள், மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக ஒருங்கிணைப்பாளர்கள், கலந்து கொண்டனர்.