தி.மு.க. வேட்பாளருக்கு வரவேற்பு
குமாரபாளையத்தில் தி.மு.க. வேட்பாளருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.
Update: 2024-03-23 01:47 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தி.மு.க. வேட்பாளருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. லோக்சபா தேர்தல் வருவதையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்தந்த பகுதி வேட்பாளர்கள் பொதுமக்கள் மத்தியில் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் பணியை துவக்கி வருகின்றனர். ஈரோடு வேட்பாளராக பிரகாஷ் அறிவிக்கப்பட்ட நிலையில், குமாரபாளையம் வந்த அவருக்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். தேர்தல் அலுவலகம் துவக்கிய பின் பிரச்சாரம் துவங்கும் என நிர்வாகிகள் கூறினர்.