பாலிஸ்டர் நூல் வரத்தால் உள்நாட்டு பனியன் உற்பத்தி முடங்கும் அபாயம்
பாலிஸ்டர் நூல் விலை வரத்தால் உள்நாட்டு பணியின் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என திருப்பூர் உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் சபி தெரிவித்தார்.
Update: 2023-12-28 07:05 GMT
திருப்பூர் சிறு, குறு உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முகமது சபி காதர்பேட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது நூல் விலை உயர்வு மற்றும் பாலியஸ் நூல் வரத்து வடமாநிலத்தில் இருந்து அதிகளவு தமிழகத்திற்கு வருவதன் காரணமாக காட்டன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் 6 மாதத்தில் திருப்பூரின் உள்நாட்டு உற்பத்தி முற்றிலும் முடங்கும். உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கும். எனவே இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி மனித சங்கில் போராட்டம் நடந்துள்ளது. இது தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.