நாசரேத் தெருக்களில் கழுதைகள் ஊர்வலம்: வாகன ஓட்டிகள் அவதி
நாசரேத் தெரு வீதிகளில் கழுதைகள் ஊர்வலமாக செல்வதினால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். ;
By : King 24X7 News (B)
Update: 2024-01-21 10:20 GMT
வீதிகளில் சுற்றி திரிந்த கழுதைகள்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சியில் தெருக்களில் கழுதைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. பல நேரங்களில் ஒரு கழுதை மற்றொரு கழுதையை விரட்டிச் செல்வதின் மூலம் இரண்டு சக்கர வாகனங்களில் வருவோரும், போவோரும் அவதிக்குள்ளாகின்றனர்.
நாசரேத் மெயின் ரோடு களில் கும்பலாக கழுதை கள் அணிவகுத்து செல்வ தினால்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே நாசரேத் பேரூராட்சி நிர்வாகம் தெருக்களிலும், மெயின் ரோடுகளிலும் கழுதைகள் அணிவகுத்து செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.