ஏரலில் பழைய தாம்போதி ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படும் : அமைச்சர்

ஏரலில் பழைய தாம்போதி ஆற்றுப்பாலம் சீரமைக்கப்பட்டு ஓரிரு நாள்களில் போக்குவரத்து தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.

Update: 2023-12-24 12:49 GMT

பாலத்தை ஆய்வு செய்த அமைச்சர்

ஏரலில் பழைய தாம்போதி ஆற்றுப்பாலம் சீரமைக்கப்பட்டு ஓரிரு நாள்களில் போக்குவரத்து தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி வரலாறு காணாத மழை பெய்தது. இதையடுத்து பாபநாசம் அணை திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ள நீா் ஏரல் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

தாமிரபரணி ஆற்றில் உயா்மட்ட பாலம் இணைப்பு சாலையில் அரிப்பு ஏற்பட்டு ஏரல் - குரும்பூா் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வே. வேலு, அந்த இடத்தை நேற்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். பின்னா் அவா் கூறியது,.ஏரல் ஆற்று உயா்மட்ட பாலம் விரைவில் சீரமைக்கப்படும். அதற்கு முன்பாக பழைய தாம்போதி ஆற்றுப்பாலத்தை ஓரிரு நாள்களில் சீரமைத்து போக்குவரத்து தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றாா். ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ், திருப்பத்தூா் எம்எல்ஏ தேவராஜ், நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் பிரதீப், தலைமை பொறியாளா் சந்திரசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News