தர்மபுரியில் அதிமுக சார்பில் மருத்துவர் ஆர்.அசோகன் போட்டி

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம்

Update: 2024-03-21 06:20 GMT

ஆர்.அசோகன்

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் விவர குறிப்புகள், மருத்துவர் ஆர்.அசோகன் எம்பிபிஎஸ்,தொழில் உதவி பேராசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் அரசு மருத்துவகல்லூரி, தருமபுரி.பிறந்ததேதி : 29.10.1989 பிள்ளையார் கோவில் நடுவிதி. அன்னசாகரம் தருமபுரி. கல்வித்தகுதி MBBS அண்ணாமலை பல்கலைக் கழகம் வருடம் (2007-2013) MS-ராஜராஜேஸ்வரி மெடிக்கல் காலேஜ் (வருடம் 2014-2017).அரசு மருத்துவர் பாலக்கோடு அரசு மருத்துவமனை (2017-2021) உதவி பேராசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. தந்தை பூக்கடை பி.ரவி அதிமுக நகர செயலாளர்.தாய் ஆர் ராஜாத்தி,தருமபுரி நகராட்சி 33வது வார்டு நகரமன்ற உறுப்பினர்.இவரது மனைவி மருத்துவர். பாஸ்கின் டிசோசா தங்கை ஆர்.கீதா, தம்பி மருத்துவர் ஆர். சரண்குமார் அரசியல் அனுபவம்,2014, 2019, 2024 மூன்று முறை தருமபுரி நாடாளுமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது. 2016, 2021 இரண்டு முறை தருமபுரி சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
Tags:    

Similar News