குளங்களுக்கு தண்ணீர் வெளியேற்றும் பணி

பழனி அருகே வரதமாநதி நீர்தேக்கம் மழை காரணமாக நிரம்பியது. இந்நிலையில் வரதமாநதி நீர்தேக்கத்தின் முழு கொள்ளளவான 67 அடி வரை நீர் நிரம்பி தற்போது வழிய துவங்கியுள்ளது.

Update: 2024-06-03 11:55 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரதமாநதி நீர்தேக்கம். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பொழியும் மழைநீர் வரதமாநதி நீர் தேக்கம், பாலாறு -பொருந்தலாறு அணை, குதிரை அணைகளில் சேர்கிறது. கடந்த சில தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக வரதமாநதி நீர்தேக்கத்திற்க்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் வரதமாநதி நீர்தேக்கத்தின் முழு கொள்ளளவான 67 அடி வரை நீர் நிரம்பி தற்போது வழிய துவங்கியுள்ளது. நீர்தேக்கத்துக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது . நீர்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் ஆயக்குடி பகுதியில் உள்ள குளங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. வரதமாநதி நீர்தேக்கத்தின் தண்ணீரை பயன்படுத்தி 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் செய்யப்படுகிறது. மேலும் பழனி மற்றும் ஆயக்குடி கிராமத்திற்க்கு குடிநீர் தேவைக்கு தண்ணீர் பயன்படுகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News