புலி வேடமிட்டு நேர்த்திக்கடன்: கௌரவித்த அதிமுகவினர்
விருதுநகரில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற புலி வேட திருவிழாவிற்க்கு புலிவேடம் அணிந்து வந்தவர்களுக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கழக கொள்கை பரப்பு துணைசெயலாளர் மாலை அணிவித்து மரியாதை செய்தார் தமிழக முழுவதும் விஜயதசமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று மகர நோன்பு திருவிழா விருதுநகரில் வீரத்தின் வெளிப்பாடாக பல்வேறு சமுதாயத்தின் சார்பில் விரதம் இருந்து புலிவேடம் அணிந்து சுவாமி தரிசன மேற்கொண்டனர். புலி வேடம் அணிந்து வந்தவர்களை கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாபா பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார் இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், நகரக் கழகத் செயலாளர் முகமது நைனார் நகர துணை செயலாளர் பா. கண்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்