'மாமல்லபுரத்தில் ட்ரோன்' பறக்கவிடப்பட்டு பரிசோதிப்பு

'மாமல்லபுரத்தில் ட்ரோன்' பறக்கவிடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

Update: 2024-04-16 13:37 GMT

டிரோன் பறக்க விட்டு பரிசோதனை

பயிர்களுக்கு உரம் தெளிப்பது உள்ளிட்ட வேளாண்மை பயன்பாட்டிற்காக, ஐ.ஐ.டி., நிறுவனம் உருவாக்கியுள்ள வேளாண்மை பயன்பாட்டு 'ட்ரோன்' மாமல்லபுரத்தில் பறக்கவிடப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தற்கால அறிவியல் கண்டுபிடிப்பான, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானம்,

பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரோன்கள் விவசாய பணிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பயிரின் வளர்ச்சியை கண்காணிக்கவும், பயிர்களில் பெருகும் பூச்சிகளை கண்டறிந்து அழிக்க, திரவ மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, 'ட்ரோன்' பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், சமதள நிலம் மட்டுமின்றி, மலைச்சரிவு நிலத்திலும் பயன்படுத்தக் கூடிய நவீன வகை 'ட்ரோன்' கண்டறிந்துள்ளது. மாமல்லபுரம் திறந்தவெளி பகுதியில், அதை பறக்கவிட்டு பரிசோதித்து வருகிறது.

Tags:    

Similar News