சேலம் மாவட்டம்,மேட்டூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-11-07 09:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம்,மேட்டூரில் நீதித்துறை சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பழக்கத்தை கட்டுப்படுத்தவும் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பொருள்களை தடுக்க வலியுறுத்தியும் மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மேட்டூர் சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துராமன் கொடி அசைத்து  தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பி சென்ற மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மார்க்கெட் வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

Similar News