மது குடித்த அரசு பஸ் டிரைவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வடசேரியில் மது குடித்த அரசு பஸ் டிரைவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.;
Update: 2024-03-21 04:58 GMT
விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (49). இவர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மார்த்தாண்டம் பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்திரசேகரன் நேற்று முன்தினம் வடசேரி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சந்திரசேகரன் இறந்து விட்டதாக தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவி ஹேமா வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.