அவிநாசி சமையலர் பாப்பால் தீண்டாமை வன்கொடுமை வழக்கில் டிஎஸ்பி நேரில் ஆஜராகி விளக்கம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி சமையலர் பாப்பால் தீண்டாமை வன்கொடுமை வழக்கில் டிஎஸ்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Update: 2024-06-01 12:38 GMT

அவிநாசி சமையலர் பாப்பால் தீண்டாமை வன்கொடுமை வழக்கில் டிஎஸ்பி நேரில் ஆஜராகி விளக்கம்

அவினாசி ஊராட்சி ஒன்றியம், குட்டகம் ஊராட்சிக்குட்பட்ட திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 2018 ஜூலை 16 அன்று,மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்த பட்டியலின பெண் பாப்பாள் மீது தீண்டாமை வன்கொடுமை நிகழ்த்தப்பட்டது. இச்சம்பவத்தில் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வட்ட வளர்ச்சி அலுவலர் மீனாட்சி வழக்கிலிருந்து நீக்கப்பட்டார். மூன்று பேர் உயிரிழந்தனர். 32 பேர் மீதான வழக்கு திருப்பூரில் பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை விசாரிக்க துவங்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று வழக்கு விசாரணை நடைபெற்ற போது அவிநாசியில் இச்சம்பவம் நடந்த போது  டிஎஸ்பியாக பணிபுரிந்த பரமசாமி ஆஜரானார்.

தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News