மனைவி காலமானதால், விரக்தியில் முதியவர் தற்கொலை.
மனைவி காலமானதால், விரக்தியில் முதியவர் பூச்சிக் கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை.
By : King 24x7 Website
Update: 2023-12-17 17:16 GMT
மனைவி காலமானதால், விரக்தியில் முதியவர் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கடவூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சவீன் வயது 62. இவர் அப்பகுதியில் விவசாயியாக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி காலமானார். இதனால், விரக்தி அடைந்த மன நிலையில் வாழ்ந்து வந்த சபின், டிசம்பர் 15 ஆம் தேதி காலை 7 மணி அளவில், அருகிலுள்ள அத்திக்குளத்துப் பட்டியில், சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான தைலக் காட்டில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த சவீன் மகன் பழனிச்சாமி வயது 39 என்பவர், இது குறித்து பாலவிடுதி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சவீன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, அருகில் உள்ள திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாலவிடுதி காவல்துறையினர்.