வீட்டை விட்டு வந்த முதியவர் மரணம் - நகர்மன்ற தலைவர் இறுதி மரியாதை
Update: 2023-11-30 06:39 GMT
இறந்தவர் உடலுக்கு இறுதி மரியாதை
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக தங்கியிருந்த சிறுவயல் கிராமத்தை சார்ந்த ரவி என்ற முதியவர் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.பின்னர் இறந்தவர் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்தார். பின்னர் ஆம்லன்ஸ்சில் உடலை உறவினர்களுடன் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.