தேர்தல் செலவின ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த தேர்தல் செலவின ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
Update: 2024-03-12 06:34 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலையில் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை வகித்து கருத்துகளை கேட்டறிந்தார். இந்த கூட்டரங்கில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.