கள்ளச்சாராய குற்றவாளிகளை என்கவுன்டர் செய்யுங்க - மாஜி அமைச்சர் கருப்பண்ணன்

கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்த நபர்கள் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் தமிழக அரசு என்கவுன்டர் செய்தால் தான் பயம் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்தார்.;

Update: 2024-06-25 05:47 GMT
கள்ளச்சாராய குற்றவாளிகளை என்கவுன்டர் செய்யுங்க - மாஜி அமைச்சர் கருப்பண்ணன்

முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் 

  • whatsapp icon
கள்ளக்குறிச்சி சம்பத்தை கண்டித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்ட்தில் ஈடுபட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் , கள்ளச்சாராயம் மூலம் எவ்வளவு உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம்,முதல்வர் ஸ்டாலின் இதை பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும் இல்லையென்றால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக உள்ளது.,சட்டம் ஒழுங்கை காப்பாற்ற சாராயம் தயாரித்த நபர் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் என்கவுன்டர் செய்தால் தான் பயம் இருக்கும் என்றார். 2026ம் ஆண்டு யார் வேண்டுமானாலும் களத்திற்கு வரட்டும் அதிமுக நல்ல கூட்டணி அமையும் 100சதவீதம் அதிமுக ஆளுட்சியாக அமையும் என்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லாம் ஜீரோ எடப்பாடி பழனிசாமி தான் ஹீரோ என்றார்.
Tags:    

Similar News