ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்ட 6வது நிகழ்வு தொடக்கம்!

புதுக்கோட்டை எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் 6-ஆவது நிகழ்வின் தொடக்க விழா நடைபெற்றது.

Update: 2024-07-02 08:28 GMT

புதுக்கோட்டை எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் 6-ஆவது நிகழ்வின் தொடக்க விழா நடைபெற்றது.


புதுக்கோட்டை ராணியார் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவிகள் இதில் பங்கேற்கின்றனர். தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் பேசுகையில், இதுவரை நடைபெற்ற 5 நிகழ்வுகளில் தலா 30 மாணவர்கள் வீதம் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றுப்பயன்பெற்றனர். இந்த முகாம்களால், மாணவர்களின் அறிவு, கற்றல் திறன், அறிவியல் ஆர்வம், அறிவியல் மனப்பான்மை மற்றும் விழிப்புணர்வு, புதியவைகளை கற்க வேண்டும் என்ற ஆர்வம், உணவு உண்பதில் மாற்றம், ஊட்டச்சத்து பற்றி விழிப்புணர்வு ஆகியவை மேம்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்றார் ராஜ்குமார்.

புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல குழுத் தலைவர் கே. சதாசிவம் தொடங்கி வைத் பேசினார். அவர் எழுதிய, மகிழ்வடன் கற்றல் நால். மகிழ்வுடன் கற்றல் நூல் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில், அரசு ராணியார் உயர்நிலைப் பள்ளியின்அறிவியல் ஆசிரியர் டி. ஜான்ஸி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கள ஒருங்கிணைப்பாளர் டி. விமலா வரவேற்றார். முடிவில் ஆசிரியர் பி. மீனா நன்றி கூறினார்.

Tags:    

Similar News