வெடி இல்லா தீபாவளி சேமிப்பு பணத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி
சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் புனித வளவனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெடி இல்லா தீபாவளி கொண்டாடி சேமித்த பணத்தில் மாற்றுதிறன் மாணவர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் புனித வளவனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெளியில்லா தீபாவளி கொண்டாடி , அதன் மூலம் சேமித்த பணத்தை கொண்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கும்,மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும், விபத்துகளில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு செயல் இழுந்தவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இப்பள்ளியின் தாளாளர் அருட் தந்தை மதலை முத்து,ஆசிரியர்கள் தீபாவளி திருநாளை வெட்டியில்லாத தீபாவளியாக கொண்டாடுங்கள், அதன் மூலம் சேமிக்கும் பணத்தை பிறருக்கு நல்ல விதத்தில் உதவுங்கள் என அறிவித்தனர் .இதனை ஏற்று பள்ளி மாணவர்கள் 754 பேரும் தங்களுடைய தீபாவளி திருநாளை முன்னிட்டு வாங்கக்கூடிய பட்டாசுகளை வாங்காமல் அதற்கான பணத்தை சேமித்து வகுப்பு வாரியாக ஆசிரியர் மூலம் வழங்கப்பட்டு, ரூபாய் 18 ஆயிரத்தில் சோப்பு, சீப்பு, டூத் பிரஸ்,என தேவைப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் அமலராக்கினி மாற்றுதிறன் மாணவர்கள் சிறப்பு உயர்நிலைபள்ளி மாணவர்கள்,மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறன் சிறப்பு பள்ளி மாணவர்கள் ஆகியோருக்வழங்கினர். முன்னதாக புனித வளவனார் மேல்நிலைப் பள்ளியை நிறுவிய அருட்தந்தை தாமஸ் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு தாளாளர் பெனட்ரிக், தலைமையாசிரியர் மதலைமுத்து,மாற்றுத்திறன் மாணவர்கள் சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் ரிப்பேர், உதவி தலைமை ஆசிரியர் பாபு, துணை தலைமையாசிரியர் லட்சுமணன் ஆகியோர் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி,ஒன்றிய குழு உறுப்பினர் அன்புதாஸ், இளையபெருமாள்,பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.