ஆதார் எண் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற ஆதார் எண் பதிவு செய்ய கால அவசாகம் ஜூன் 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-05 05:48 GMT

பைல் படம் 

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 ன் கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற, பயனாளிகள் தங்களது ஆதார் எண் பதிவு செய்தல் அல்லது ஆதார் எண்ணினை அங்கீகாரம் செய்ய விண்ணப்பித்தல் தொடர்பான கால அவகாசம் 30.06.02024 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பயனாளிகள் மேற்படி கால அவகாசத்தினை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News