அட்மா திட்டத்தில் விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரத்தில் இருந்து அட்மா திட்டத்தில் தேசிய நெல் திருவிழாவிற்கு விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரத்தில் இருந்து நெல் திருவிழாவிற்கு திருத்துறைப்பூண்டி சென்றனர். உலகப் புகழ்பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழாவில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பாக நடைபெற்ற கருத்து கண்காட்சியில் மூலிகை பாதுகாவலர் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்ட கருத்தரங்கு ,பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை இடுபொருள்கள், கண்காட்சி திடல்கள் விவசாயிகள் கண்டுகளித்தனர்.
கண்டுணர்வு சுற்றுலாவில் ஆலங்குடிமகாஜனம், புதூர் உத்தமனூர், நகர் , நெருஞ்சலகுடி, கோமகுடி,பண்பரம்சுற்றி, மருதூர், பல்லபுரம் , சிறுமயங்குடி வாளாடி,கிராமத்தில் இருந்து 50 மேற்பட்ட பல முன்னாடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதற்கான ஏற்பாட்டினை லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார், வேளாண்மை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட வட்டார மேலாளர் சபரி செல்வன் , உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் கார்த்திக்,தமிழ்மணி ஆகியோர் செய்திருந்தனர்.