இபிஎஸ்க்கு நினைவு பரிசு வழங்கிய விவசாயிகள்
பெத்தநாயக்கன்பாளையத்தில் கைகால் வளைவு திட்டம் கொண்டு வந்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் பசுவுடன் கூடிய கன்று சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.;
Update: 2024-02-28 05:26 GMT
நினைவு பரிசு வழங்கல்
ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் கைகான் வளைவு திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்.10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டம் அரசிதழில் ஆணையாக வெளியிட செய்த்தை அடுத்து வசிஷ்ட ந்தி நீர் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாரட்டு விழா பெத்தநாயக்கன்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் பசுமாடு கன்றுடன் இருக்க ௯டிய சிலையை பரிசாக விவசாயிகள் இணைந்து வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளரை இளங்கோவன் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் உள்ளிட்ட ஒன்றிய நகர பேருர் கழக நிர்வாகிகள் விவசாயிகள் பங்கேற்பு.