பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் அருகே முன்பகை காரணமாக பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2024-03-08 07:00 GMT

காவல் நிலையம் 

விருதுநகர் கிழக்கு பாண்டியன் காலனியைச் சார்ந்தவர் செல்லம்மாள் வயது 55 இவருடைய மகன் முத்துக்குமார் என்பவர் கல்லூரி படிப்பு படித்துவிட்டு அரசு தேர்வுக்காக தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற வருவதாக கூறப்படுகிறது. இவருக்கும் அதே பகுதியை சார்ந்த தர்மலிங்கம் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த பிரச்சனைகள் தர்மலிங்கத்தை முத்துக்குமார் காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தர்மலிங்கம் மதுபோதையில் செல்லம்மாள் வீட்டில் தனியாக இருந்த பொழுது அங்கு சென்று செல்லம்மாளளை தாக்கி காயப்படுத்தி உள்ளார் காயம் அடைந்த செல்லம்மாள் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்

Tags:    

Similar News