சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒரு அறை சேதம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு அறை சேதம் அடைந்தது.;

Update: 2024-04-30 15:07 GMT
வெடி விபத்தில் சேதமடைந்த அறை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மேலாமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாவாளகுறிச்சியில் சிவகாசியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான கருடா என்ற பெயரில் நாக்பூரில் இயங்கி வரும் மத்திய வெடிப்பொருள் கட்டுபாட்டுத்துறையில் அனுமதி பெற்று பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

பணியாளர்கள் வழக்கம் போல் பேன்ஸி ரக வெடி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது ஒரு அறையில் மணி மருந்து செலுத்தும் போது தரையில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் மருந்து செலுத்தும் அறை முழுவதும் தீ விபத்து ஏற்பட்டு சேதமடைந்தன.

Advertisement

இந்த விபத்தை தொடர்ந்து பட்டாசு ஆலையில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விருதுநகர் டிஎஸ்பி பவித்ரா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டாசு ஆலை உரிமையாளரிடம் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News