பறக்கும் படை வாகனம் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்து !
பறக்கும் படை வாகனம் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்ப்பட்டது. அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-21 12:30 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில், இரவு வாகன சோதனை முடித்து விட்டு, பறக்கும் படை மகேந்திரா கார், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரும்பியுள்ளது. வாகனத்தை, சூர்யா, 30, என்பவர் இயக்கினார். வாகனத்தில், கயப்பாக்கம் குறுவட்ட சர்வேயர் சதீஷ் மற்றும் இரண்டு போலீசார் பயணித்தனர். செய்யூர் பகுதியில், போளூர் - எல்லையம்மன் கோவில் மாநில நெடுஞ்சாலை வழியாக, வாகனம் சென்று கொண்டு இருந்தது. அப்போது, சால்ட் ரோடு அருகே, நேற்று காலை 4: 00 மணிக்கு, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், நல்வாய்ப்பாக காரில் பயணித்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.