எடப்பாடியில் 1.96 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்- எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடியில் 1.96 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டம் 2023-2024 ஆம் ஆண்டு நிதியாண்டில் தொடங்கப்படவுள்ள திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தில் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், பங்கேற்று எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி ஆகிய மூன்று ஒன்றியங்கள், மற்றும் கொங்கணாபுரம், நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம், பூலாம்பட்டி ஆகிய ஐந்து பேரூராட்சிகளில் 1.96 கோடி மதிப்பில் கட்டப்படும் பணிகளுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், எடப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
குறிப்பாக சேலம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்குளம், பக்கநாடு,தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் 64.05 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கச்சுப்பள்ளி, கோணசமுத்திரம், சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைத்தல், பயணியர் நிழற்குடம் அமைக்கும் பணிகளுக்கு 22 லட்சம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது... இதைத்தொடர்ந்து சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனவாசி,பூலாம்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் சிமெண்ட் சாலை அமைத்தல், வடிகால் அமைத்தல், கழிவுநீர் சாக்கடைவசதி, நீர்த்தேக்கதொட்டி அமைத்தல்,
குடிநீர் பைப் லைன் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்தமாக 20 புதிய கட்டுமான பணிகளுக்கு 1.96 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.... அப்போது நகரம், ஒன்றிய, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...